தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் - அதிர்ச்சி சம்பவம்

போதையில் கொடூரன் தெரு நாயை பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-03-05 14:45 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியின் இந்திரபுரி நகரின் ஜேஜே காலணியில் மதுபோதையில் கொடூர நபர் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜேஜே காலணி பி பிளாக்கில் வசித்து வரும் ராஜேஷ் இந்திரபுரி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், கடந்த 28-ம் தேதி இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நான் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது, ஜேஜே காலணி பி பிளாக்கில் எனது வீட்டிற்கு அருகே நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்து அங்கு சென்றுபார்த்தபோது எனது வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவர் அந்த நாயை பாலியல் வன்கொடுமை செய்துகொண்டிருந்தார்' என்று புகார் அளித்தார். சதீஷ் மது போதைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

மேலும், சதீஷ் மதுபோதையில் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்ததை ராஜேஷ் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். சதீஷ் மீது புகார் கொடுத்தபோது புகாருக்கான ஆதாரமாக அந்த வீடியோவையும் அவர் கொடுத்துள்ளார். வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மதுபோதையில் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியின் ஹரி நகரில் உள்ள பூங்காவில் நாயை நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. பூங்காவில் நடந்த சம்பவத்தில் குற்றவாளி யார் என்று இதுவரை தெரியவில்லை. மேலும், குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்