குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு
மங்களூரு அருகே,குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஜோக்கட்டே பகுதியை சேர்ந்தவர் சியாப் (வயது 25). இவர் நேற்றுமுன்தினம் மாலை பாயார்பதவு கிராமம் அருகே உள்ள உலாய்பெட்டு பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்றிருந்தார்.
பின்னர் கிரிக்கெட் விளையாடி முடித்துவிட்டு அருகில் இருந்த குட்டையில் குளிப்பதற்காக சியாப் தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்ற சியாப், நீரில் மூழ்கி தத்தளித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், சியாப்பை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் சியாப், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.