மத்தியபிரதேசத்தில் புல்டோசரில் திருமண ஊர்வலம்: ரூ.5 ஆயிரம் அபராதம்

பொதுவாக திருமணத்தின்போது மாப்பிள்ளை, கார் அல்லது குதிரையில் ஊர்வலமாக வருவது வழக்கம்.

Update: 2022-06-25 00:02 GMT

போபால், 

பொதுவாக திருமணத்தின்போது மாப்பிள்ளை, கார் அல்லது குதிரையில் ஊர்வலமாக வருவது வழக்கம்.ஆனால் மத்தியபிரதேச மாநிலம் ஜல்லார் கிராமத்தைச் சேர்ந்த சிவில் என்ஜினீயரான அங்குஷ் ஜெய்ஸ்வால், தனது திருமண ஊர்வலத்தில் வித்தியாசமாக பவனி வர முடிவெடுத்தார்.கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் இவர், தனது பணி சார்ந்த புல்டோசரில் திருமண ஊர்வலம் செல்ல தீர்மானித்தார். அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற தன்னுடைய திருமணத்தில் புல்டோசர் ஒன்றில் கம்பீரமாக ஊர்வலம் வந்தார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவின. அதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட புல்டோசர் டிரைவரை கைது செய்த போலீசார், மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்