ஆகாஷ் ஏவுகணை விவரங்கள் ஒப்படைப்பு

10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய ராணுவத்திலும், விமானப்படையிலும் இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது.

Update: 2022-12-04 18:22 GMT

புதுடெல்லி,

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்த முதலாவது ஏவுகணை 'ஆகாஷ்' ஆகும். இது, தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்லது.

10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய ராணுவத்திலும், விமானப்படையிலும் இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது. இந்தியாவின் வான் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.

இந்தநிலையில், ராணுவ பயன்பாட்டுக்கான 'ஆகாஷ்' ஏவுகணையின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட 'சீல்' வைக்கப்பட்ட விவரங்களை ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை திட்ட தர உறுதியளிப்பு நிறுவனத்திடம் டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் ஒப்படைத்தது.

இதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்