ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2022-11-29 20:07 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

ஐகோர்ட்டுகள், விசாரணை கோர்ட்டுகளில் உள்ள நீதிபதிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, 'ஐகோர்ட்டுகள், விசாரணை கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்' என வாதிட்டார்.

இந்த வாதத்தை பரிசீலித்த நீதிபதிகள், 'ஜனரஞ்சகமான, எளிமையான தீர்வுகளை கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கான தீர்வை காண முடியாது. அலகாபாத் ஐகோர்ட்டில் 160 நீதிபதிகளை நியமிக்க முடியாதபோது, 320 நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்கிறீர்கள். மும்பை ஐகோர்ட்டில் ஒரு நீதிபதியை கூட கூடுதலாக நியமிக்க முடியாது. பார்க்கும் தீமைக்கெல்லாம் தீர்வுகாண பொதுநல மனு தேவை இல்லை' என தெரிவித்து, பொதுநல மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்