டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெங்களூருவில் டி.கே.சிவக்குமாரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2023-05-17 21:40 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ள காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையில், சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி என்று உறுதியாகி இருப்பதாக தகவல் பரவியது. இதனால் சித்தராமையா ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீடு, அவரது சொந்த ஊரான ராமநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம், அசம்பாவித சம்பங்கள் நடக்கலாம் என்பதால் முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீடு, சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை போலீசார், 80-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல், ராமநகர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமநகர் மாவட்டம் தொட்டஆலஹள்ளியில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டுக்கும் ராமநகர் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்