டி.ஜே.ஹள்ளி வன்முறை சம்பவம்: மேலும் 4 பேர் கைது

டி.ஜே.ஹள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-22 22:16 GMT

பெங்களூரு: பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் உள்ள எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எப்.ஐ அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருந்தார்கள். அதன்படி கர்நாடகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது பெங்களூருவில் இதற்கு முன்பு நடந்திருந்த டி.ஜே.ஹள்ளி மற்றும் கே.ஜி.ஹள்ளி வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சிக்கிய ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் வன்முறை வழக்கில் தலைமறைவாக இருந்த நான்கு பேரும் சிக்கி உள்ளனர். அவர்களிடம் பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்