தீபாவளி தருணத்தில் டிஜிட்டல் வழி பணபரிமாற்றம் அதிகரிப்பு: பிரதமர் மோடி மகிழ்ச்சி

உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதும், உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தின் உதவியால், நம்முடைய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது என்று பேசியுள்ளார்.

Update: 2023-11-26 07:41 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றும்போது, உள்ளூர் பொருட்களை வாங்குவோம் என்ற பிரசாரத்தின் வெற்றியானது, வளர்ச்சியடைந்த மற்றும் வளம் நிறைந்த இந்தியா என்பதற்கான கதவுகளை திறந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு அது வலு சேர்த்துள்ளது.

இந்தியாவின் சமநிலையிலான வளர்ச்சிக்கு அது உத்தரவாதம் அளிக்கிறது. உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதும், உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தின் உதவியால், நம்முடைய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது என்று பேசியுள்ளார்.

2-வது ஆண்டாக தீபாவளி தருணத்தில், கையில் இருந்து பணம் செலுத்த கூடிய முறை குறைந்துள்ளது. டிஜிட்டல் வழியே மக்கள் அதிக அளவில் பணபரிமாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் கூடுதலாக ஒரு விசயம் செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்கு, யு.பி.ஐ. அல்லது டிஜிட்டல் வழியே மட்டுமே பணபரிமாற்றங்களை மேற்கொள்வது என முடிவு செய்ய வேண்டும்.

டிஜிட்டல் புரட்சியின் வெற்றியானது, இதனை சாத்தியப்படுத்தி உள்ளது. ஒரு மாதம் கழித்து, உங்களுடைய அனுபவங்கள் மற்றும் புகைப்படங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்காக, உங்களுக்கு இப்போதே என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்