குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

கடூர் அருகே, குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-08-21 15:13 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஹாலகட்டே கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்நாயக் (வயது 26). இவர் சொந்தமாக பசுமாடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் தனது பசுமாடுகளை குளிப்பாட்ட அழைத்து சென்றார்.

அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு ஸ்ரீதர்நாயக் சென்றபோது நீரில் முழ்கி தத்தளித்தார். அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் அவர் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கடூர் போலீசார் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்