ஜனதாதளம்(எஸ்) கட்சி கவுன்சிலர் பதவி நீக்கம்

கட்சி மாறி வாக்களித்ததாக ஜனதா தளம் (எஸ்) கட்சி கவுன்சிலரை பதவி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-11-01 20:40 GMT

கோலார் தங்கவயல்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி நகரசபை உறுப்பினராக இருந்தவர் முகமத் ஷபீக். ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி நடந்த நகரசபை தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில், கட்சி மாறி வாக்களித்த கவுன்சிலர் முகமது ஷபீக்கின் பதவியை பறிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த கலெக்டர், கட்சி மாறி வாக்களித்த முகமது ஷபீக்கை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது ஷபீக், கலெக்டரின் முடிவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்