புதிய பாடத்திட்ட தயாரிப்புக்கு பொதுமக்களிடம் கருத்துகேட்பு: மத்திய அரசு அழைப்பு

புதிய பாடத்திட்ட தயாரிப்புக்கு பொதுமக்களிடம் கருத்துகேட்பது தொடர்பாக இணையதளம் மூலம் தெரிவிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2022-08-16 19:28 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

தேசிய கல்விக்கொள்கை 2020-க்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், பள்ளிக்கூட நிர்வாகிகள், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், சமுதாய உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வல்லுனர்கள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள் உள்பட பள்ளிக்கல்வி மற்றும் ஆசிரியர் கல்வியில் ஆர்வம் உள்ள வர்களிடம் இணையம் வாயிலாக கருத்துக்கேட்பு நடத்தப்பட உள்ளது. அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் உள்பட மொத்தம் 23 மொழிகளில் இந்த கருத்துக்கேட்பு நடைபெறும்.

கருத்துகேட்பில் பங்கேற்க விரும்புவோர் https://ncfsurvey.ncert.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்துக்கான இந்த கட்டமைப்பு, மேம்பட்ட இந்தியாவை உருவாக்குதல் என்ற இலக்கை அடைவதிலும், காலனி ஆதிக்க முறையில் இருந்து கல்வித்துறையை விடுவித்து, அடுத்த தலைமுறையினர் இடையே பெருமிதத்தை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்