விடுமுறை தினத்தை முன்னிட்டு திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Update: 2023-07-23 10:45 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திருமலையில் குவிந்தனர். வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் லட்டு கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. திருப்பதியில் நேற்று 84,430 பேர் தரிசனம் செய்தனர். 38, 662 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.   

Tags:    

மேலும் செய்திகள்