திருப்பதி சென்ற பக்தர்களின் கார் கவிழ்ந்து விபத்து - சென்னையை சேர்ந்த 3 பேர் படுகாயம்

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சாலையோர தடுப்பில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-10 05:32 GMT

திருப்பதி,

சென்னையை சேர்ந்த 3 பக்தர்கள் நேற்று காலை திருப்பதியில் தரிசனம் முடித்து விட்டு இன்று அதிகாலை மீண்டும் சென்னை செல்வதற்காக காரில் புறப்பட்டனர். அப்போது காலை 9 மணி அளவில் அவர்கள் வந்த கார் அலிபிரி மலைப்பாதையில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் காரில் வந்த மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிநது வந்த அலிபிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பாதையில் கார் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்