பக்தர்கள் தரிசன அறை முன்பணம் திரும்ப கிடைப்பதில் குளறுபடி

திருப்பதி ஏழுமலையான் ேகாவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

Update: 2022-07-15 03:21 GMT

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் ேகாவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களுக்கு ேதவஸ்தானம் சார்பில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆன்லைன் மூலம் அறைகள் பெறும் பக்தர்கள் அதற்கான வாடகை கட்டணத்தை விட 2 மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர்.

இதற்கு முன்பு அறையில் தங்கியிருந்த பக்தர்கள் அறையை காலி ெசய்யும்போது, பக்தர்களிடம் இருந்து ெபறப்பட்ட முன்பணம் உடனடியாக பக்தர்களிடம் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஆன்ைலன் மூலம் பக்தர்களிடம் இருந்து பெறப்படும் முன்பணம் பக்தர்கள் தங்கிருந்த அறைகளை காலி செய்து பின் 30 நாட்கள் ஆகியும் திருப்பி தரவில்லை, என ஏராளமான பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், தேவஸ்தான அறைகளை காலி செய்த உடன் பக்தர்களின் வங்கி கணக்குக்கு தேவஸ்தானம் சார்பில் கூடுதலாக பெறப்பட்ட முன்பணம் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், வங்கிகள் பணத்தை உடடினயாக அனுப்பாமல் காலதாமதம் செய்து வருகிறது. விரைவில் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்