ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவராக தேவேகவுடா மீண்டும் தேர்வு

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவராக தேவேகவுடா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-10-27 18:45 GMT

பெங்களூரு:

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவராக இருப்பவர் எச்.டி.தேவேகவுடா. இவர் முன்னாள் பிரதமர் ஆவார். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சியின் அலுவலகமான ஜே.பி. பவனில் நேற்று கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது.

தேவேகவுடா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், கேரள மின்சாரத்துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி மற்றும் 13 மாநிலங்களின் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் நிர்வாகிகள், தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவராக தேவேகவுடா ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு குமாரசாமி, கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்