டெலிகிராம் செயலி மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசையில்வியாபாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி

டெலிகிராம் செயலி மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசையில் வியாபாரியிடம் ரூ.13 லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-04-27 18:45 GMT

சிக்கமகளூரு-

தாவணகெரே டவுன் வினோபாநகரை சேர்ந்தவர் அந்தோணி. வியாபாரி. இவரது செல்போனில் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், டெலிகிராம் செயலி மூலம் தனியார் நிறுவனத்தில் பொருட்களை வாங்கி விற்பனை செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும் என்று குறுந்தகவல் வந்தது. இதனை நம்பிய அவர், ரூ.10 ஆயிரத்துக்கு பொருட்களை வாங்கி விற்பனை செய்தார். அதன்மூலம் அவருக்கு ரூ.1,200 கமிஷன் கிடைத்தது. இதையடுத்து அவர் டெலிகிராம் செயலி மூலம் பொருட்களை வாங்கி விற்பனை செய்து கமிஷன் பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெலிகிராம் செயலி மூலம் ஒரு நிறுவனத்தில் ரூ.13 லட்சம் செலுத்தினார்.

ஆனால் அவருக்கு பொருட்களும் வரவில்லை, பணமும் திரும்ப தரப்படவில்லை. இதையடுத்து அந்த செயலியில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்புகொண்டார். ஆனால் அந்த செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அந்தோணி, யாரோ மர்மநபர் ரூ.13 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தாவணகெரே சி.இ.என். போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்