டெல்லி; மகளிர் இடஒதுக்கீடு மசோதா எம்.பி.க்களுக்கு அக்னி பரீட்சை: பிரதமர் மோடி
டெல்லியில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா எம்.பி.க்களுக்கு ஓர் அக்னி பரீட்சை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது, இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பேசிய பிரதமர், எம்.பி.க்களுக்கு இது ஓர் அக்னி பரீட்சை என கூறியுள்ளார்.