ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த தேநீர் விருந்து: பிரதமர் மோடி பங்கேற்பு
இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார். இதில் பிரதமர் மோடி மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லி:
நாட்டின் 74-வது குடியரசு தினம் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தலைவர் அளிக்கும் தேநீர் விருந்தானது மிகவும் பிரபலமானது. அந்த வகையில் இன்று நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லி ராஷ்டிரபதியில் தேநீர் விருந்து அளித்தார்.
குடியரசு தலைவரின் இந்த தேநீர் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதைப்போல் எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா பங்கேற்றார். மேலும் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் பங்கேற்றுள்ளார். மேலும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் அப்துல் ஹமீது அன்சாரி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.