மனைவியுடன் சண்டை: 2 வயது குழந்தையை மாடியில் இருந்து வீசி விட்டு தானும் குதித்த கணவன்
மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு தனது குழந்தையை 3-வது மாடியில் இருந்து கணவன் வீசிய பதைபதைக்க வைக்கும் சம்பம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியின் தென்கிழக்கில் உள்ள கல்கஜி என்ற பகுதியில் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்ட 30 வயது நபர் தனது குழந்தையை மூன்றாவது மாடியில் இருந்து வெளியே வீசிவிட்டு, தானும் குதித்த சம்வம் பதைபதைக்க வைத்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,
மண் சிங்- பூஜா என்ற தம்பதிகள் டெல்லியில் வசித்து வந்தனர்.இந்த தம்பதிகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதால் தனது 2-வயது மகனை அழைத்துக்கொண்டு பூஜா தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால், கோபம் அடைந்த மண்சிங் குடிபோதையில் மனைவியுடன் சண்டை போட்டு இருக்கிறார். அப்போது தனது குழந்தையை தூக்கி வெளியே வீசி இருக்கிறார். உடனே தானும் குதித்து இருக்கிறார். இதில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண் சிங் மீது 307 (கொலை முயற்சி) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.