இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு விளக்கம்

இலங்கை சூழல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

Update: 2022-07-19 13:22 GMT

புதுடெல்லி,

இலங்கை கடந்த 70 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது இந்நிலையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து டெல்லியில் இன்று அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில், இலங்கை சூழல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், இலங்கையில், முன்எப்போதும் இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவுகிறது. நமது அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அதன் பின்விளைவுகள் குறித்தும் கவலைப்படுகிறோம். அதேவேளையில் இலங்கை சூழலை இந்தியாவுடன் ஒப்பிடப்படுவதை போதிய விவரம் அற்றதாகவே நாங்கள் பார்க்கிறோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்