டெல்லி: நரேலா தொழிற்பேட்டை பகுதி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு!

டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-11-01 06:15 GMT

புதுடெல்லி,

டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவியதால், 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று டெல்லி தீயணைப்பு சேவை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்தில் பெரிய அளவில் யாருக்கும் கயங்கள் ஏற்படவில்லை.ஒரு சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக டெல்லி போலீசார் கூறி உள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.துரதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர், உயிரிழந்தவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்