மத உணர்வுகளை புண்படுத்திய வழக்கு: 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் ஜாமீன் மனு தள்ளுபடி

முகமது ஜூபைரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து , 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-02 10:40 GMT

புதுடெல்லி,

செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக 'ஆல்ட் நியூஸ்' செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜூபைர் செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது டுவிட்டர் பக்கத்தில் மதஉணர்வுகளை புண்படுத்தும்படி சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படத்தை பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் போரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ் காவலில் உள்ள முகமது ஜூபைர் ஜாமீன் கோரி டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு இன்று டெல்லி பட்டியாலா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

முகமது ஜூபைர் மீது குற்றச் சதி மற்றும் சாட்சியங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இதனால் அவரை நீதிமன்ற காவலில் வைக்க போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில், முகமது ஜூபைர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து , 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்