ஒடிசா சாலை விபத்து; மிகுந்த வேதனை அளிக்கிறது- பிரதமர் மோடி இரங்கல்

மேற்கு வங்காள மாநில சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து ஒடிசாவில் விபத்துக்குள்ளானது.

Update: 2022-05-25 11:24 GMT

புதுடெல்லி,

மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் உகம்பூர் பகுதியை சேர்ந்த 60 பேர் பேருந்தில் சுற்றுலா சென்றனர். ஒடிசா மாநிலம் கலிங்கா சாடி அருகே அந்த பேருந்து சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், " ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழப்பு நேரிட்ட செய்தி கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" எனத்தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்