கோலார் தங்கவயலில் தொழிற்பேட்டை அமைக்க முடிவு: முதல்-மந்திரிக்கு கோலார் பா.ஜனதா நன்றி

கோலார் தங்கவயலில் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்துள்ள முதல்-மந்திரிக்கு கோலார் பா.ஜனதா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-18 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் பி.இ.எம்.எல். நிறுவனத்துக்கு ெசாந்தமான 971 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இந்த நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கோலார் தங்கவயலில் பி.இ.எம்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 971 ஏக்கர் காலி நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் ெபாம்மை அறிவித்துள்ளார். இதனால், கோலார் தங்கவயல் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கோலார் மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் சுரேஷ் நாராயண் கூறுகையில், கோலார் தங்கவயலில் தங்கச்சுரங்கம் மூடப்பட்ட பிறகு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது.

இதற்கு மாற்று ஏற்பாடாக தமிழக முன்னாள் முதல்-அமைச்சா் காமராஜரின் முயற்சியால் பி.இ.எம்.எல். நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் அப்போதைய மத்திய அரசு புறக்கணித்தது. இதனால் தங்கவயல் மக்கள் வேலை தேடி பெங்களூருவுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையில் தற்போது பி.இ.எம்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 971 ஏக்கர் காலி நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதனை வரவேற்கிறேன். இதனால் கோலார் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கும், கோலார் மாவட்ட மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்