தொழில்முறை நெசவாளர்களுக்கு மானியம் வழங்க முடிவு

தொழில்முறை நெசவாளர்களுக்கு மானியம் வழங்க முடிவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

Update: 2022-12-17 20:29 GMT

பெங்களூரு:-

பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நெசவாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நெசவாளர்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவது குறித்து முக்கியமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெசவாளர்களின் வளர்ச்சிக்காக 10 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொழில்முறை நெசவாளர்களுக்கு 50 சதவீத மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நெசவாள தொழிலாளர்கள் குடும்பத்தை அரசின் வித்யா விகாஸ் திட்டத்தில் இணைத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே நெசவு தொழில் செய்வோரை, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நெசவாளர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்தி கொள்ளும் விதமாக, அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 எச்.பி. வரை மின்சாரம் பயன்படுத்தும் நெசவாளர்களுக்கு, தமிழ்நாட்டை போன்று இலவச மின்சாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜவுளித்துறை மந்திரி சங்கர பட்டீல் முனேகொப்பலு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்