வேட்பாளர்கள் குறித்து முடிவு; காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-06 11:39 GMT

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் பா.ஜ.க. 195 பேரின் பெயர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த வேட்பாளரின் பெயரையும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தகவல்தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யும் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் மார்ச் 7-ந்தேதி(நாளை) மாலை 6 மணிக்கு நடைபெறும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்