குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பான விவாதம் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மாநில முதன்மைச் செயலாளர்களின் கூட்டத்திற்கு 3 வாரங்களுக்குள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2023-02-26 10:44 GMT

புதுடெல்லி,

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005-ன் படி, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் காப்பகங்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சேவை மையங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, 'வி- தி விமன் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க மாநில முதன்மைச் செயலாளர்களின் கூட்டத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 3 வாரங்களுக்குள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த கூட்டத்தில் நிதி, உள்துறை, சமூக நலன் ஆகிய துறைகளின் செயலாளர்களும், தேசிய மகளிர் ஆணையம், தேசிய சட்டப்பணிகள் ஆணையம் ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்