மரணமே,உனக்காக நான் காத்திருக்கிறேன்....! டிஜிபியை கொலை செய்த வாலிபரின் டைரி குறிப்பு
அகமதுவின் பெர்சனல் டைரியை போலீசார் கைபற்றி உள்ளனர். அதில் யாசிர் எழுதியதாகக் கூறப்படும் பதிவுகள், அவர் மனச்சோர்வடைந்திருப்பதைக் காட்டுவதாக, போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வந்திருக்கும் நிலையில், சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டிஜிபி லோஹியா, ஜம்மு நகரில், உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்
கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் சிறைத்துறை டிஜிபியாக பதவி உயர்வுபெற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரது மாயமான நிலையில், அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
லோஹியா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது(23) இன்று கைது செய்யப்பட்டார்.இவர் லோஹியா வீட்டில் வேலை செய்து வந்தார்.
அகமதுவின் பெர்சனல் டைரியை போலீசார் கைபற்றி உள்ளனர். அதில் யாசிர் எழுதியதாகக் கூறப்படும் பதிவுகள், அவர் மனச்சோர்வடைந்திருப்பதைக் காட்டுவதாக, போலீசார் தெரிவித்தனர்.
யாசிருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் டைரியில் புலா தேனா முஜே போன்ற துக்ககரமான இந்திப் பாடல்களின் வரிகள் உள்ளன. பிற பக்கங்களில் இதய துடிப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய சிறு குறிப்புகள் உள்ளன.
"நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன். ஜிந்தகி தோ பாஸ் தக்லிப் தேதி ஹை. சுகூன் தோ அப் மௌத் ஹி தேதி (வாழ்க்கை துன்பத்தை மட்டுமே தருகிறது. மரணம் மட்டுமே எனக்கு அமைதியைத் தரும்)... நான் என் வாழ்க்கையை மீண்டும் தொடங்க விரும்புகிறேன்," என்று அவர் எழுதி உள்ளார்.
மற்றொரு பக்கம், "அன்புள்ள மரணமே, தயவுசெய்து என் வாழ்வில் வா, உனக்காக நான் எப்போதும் காத்திருக்கிறேன் என கூறி உள்ளார்.