ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் 5-ம் நாள்..!
தமிழகத்தில் ராகுல்காந்தி 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் முடித்தார். குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் சென்ற ராகுல்காந்தி சுமார் 56 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று கேரள எல்லையில் தனது பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். கேரளா, செறுவாரகோணத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.