வீடு புகுந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
வீடு புகுந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நஹ்ரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அதேபகுதியை சேர்ந்த திரேந்திர சிங் என்ற நபர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வீடு புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திரேந்திர சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.