118 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

Update: 2022-09-27 05:32 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த 118 நாட்களில் பதிவான மிகக்குறைவான தினசரி கொரோனா பாதிப்பாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 4 ஆயிரத்து 553 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 37 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 217 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரத்து 967 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்