டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் பலி
டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார்.
மும்பை,
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது டிவைடரில் கார் மோதியதில் காரில் இருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2012-ல் இருந்து 2016வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரச் மிஸ்திரி பணியாற்றி உள்ளார்.