ஆந்திராவில் மிக்ஜம் புயல் கரையை கடந்தபோது சுழன்று அடித்த சூறாவளி - வைரல் வீடியோ
மிக்ஜம் புயல் நேற்று மாலை கரையை கடந்தது.
அமராவதி,
வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் நேற்று மாலை தெற்கு ஆந்திரா கடல்பகுதியில் கரையை கடந்தது. சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜம் புயல் கரையை கடந்தபோது ஆந்திராவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆந்திராவில் புயல் கரையை கடந்தபோது சூறாவளி காற்று சுழன்று அடித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. புயல் கரையை கடந்தபோது பல்வேறு பகுதிகளில் கனமழையுடன், 100 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.