திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

Update: 2022-08-13 09:27 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறையிலும் நிரம்பி இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் அறைகள் கிடைக்காமல் பெருமளவு பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கி வருகின்றனர்.

அதேபோல் 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கின்றனர். அதிக பக்தர்கள் கூட்டம் இருப்பதால் லட்டு தட்டுப்பாடு உள்ளது. பக்தர்களுக்கு இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதியில் கூட்டம் அதிகரித்ததால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்வதாக தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்