மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு: ராஜஸ்தான் எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்..!

மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த ராஜஸ்தான் எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-06-16 01:02 GMT

image courtesy: MLA ShobhaRani Kushwaha twitter

ஜெய்பூர்,

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலும் 4 இடங்களுக்கான மேலவை எம்.பி.க்கள் கடந்த 10-ந்தேதி தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த வாக்குப்பதிவின்போது, பாஜக எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வா, கட்சியின் உத்தரவை மீறி காங்கிரஸ் உறுப்பினரை ஆதரித்து வாக்கு அளித்ததாக தெரியவந்தது. இதையடுத்து அன்றைய தினமே அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இடைநீக்கம் செய்யப்பட்டார். நோட்டிசில் 19-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்க கேட்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்குள்ளாக அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக மத்திய ஒழுங்கு குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. குழுவின் செயலாளர் ஓம் பதக் இதுபற்றி அவருக்கு அனுப்பிய அறிக்கையில்... "நீங்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள். இதர அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறீர்கள்" என்று கூறப்பட்டு உள்ளது.

ஷோபாராணி, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. குஷ்வாவின் மனைவி ஆவார். 2018 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்