கொரோனா தடுப்பூசியால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்? - ஆய்வில் தகவல்
கொரோனா வைரசை தடுக்க நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி ஒவ்வொரு மாநில சுகாதாரதுறையின் சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியால் பெண்களின் மாத விடாய் சுழற்சியில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொண்ட 20 ஆயிரம் பெண்களிடமும், தடுப்பூசி செலுத்தாத 5 ஆயிரம் பெண்களிடமும் (பிரிட்டிஷ் மருத்துவ இதழ்) என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்களின் மாதவிடாய் சுழற்சிக்கான காலம் தற்காலிகமாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இரத்தப்போக்கு ஆரம்பத்தை சில மணிநேரங்கள் தாமதப்படுத்துகிறது.
இந்த ஆய்வில் தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் 6.2% மற்றும் தடுப்பூசி போடப்படாதவர்களில் 5% ஆகும். தடுப்பூசி போடுவதற்கு முன் நீண்ட மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருந்த இளம் பெண்கள், மாதவிடாய் தொடங்குவதில் அதிக தாமதத்தைக் காண வாய்ப்புகள் அதிகம் என தெரியவந்துள்ளது.
இந்த மாற்றம் எல்லா நிறுவன தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் உறுதியாகியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.