கேரளாவில் மீண்டும் 1,500-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-04 17:25 GMT

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், மீண்டும் சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏற்றம் கண்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் இன்று புதிதாக 1,544 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 972 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 11.39 ஆகப் பதிவாகியுள்ளது. வாராந்திர சராசரி 8.95 ஆகப் பதிவாகி வருகிறது.

முன்னதாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறிய அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி, பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்