இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது.

Update: 2023-03-30 04:23 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தினசரி பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் அதிகளவிலான பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் 1,573 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மத்திய சுகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கயில் ஒரு நாள் பாதிப்பு 3016- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,509- ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்