மாநகராட்சி நிதி நிலைக்குழு தலைவியின் கணவர் கைது

சுற்று இடித்துவிட்டு கொலை மிரட்டல் மாநகராட்சி நிதி நிலைக்குழு தலைவியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-26 18:45 GMT

சிவமொக்கா:-

சிவமொக்கா மாவட்டம் துங்காநகர் திப்புநகர் 5-வது சந்திப்பை சேர்ந்தவர் செஹரா. அதே பகுதியில் வசித்து வருபவர் ஆசிப் என்ற ஷெரீப். இவரது மனைவி மாநகராட்சி நிதி நிலைக்குழு தலைவியாக உள்ளார். ஷெரீப்பின் வீ்ட்டின் அருகே வசித்து வரும் செஹரா, தனது வீட்டை சுற்றி சுவர் அமைத்திருந்தார். இந்த தடுப்பு சுவர் ஷெரீப்பிற்கு தொந்தரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சுற்று சுவரை அகற்றும்படி செஹராவிடம் தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஷெரீப் மற்றும் அவரது உறவினர்களான மக்சூத், நிசார் அகமது ஆகியோர் சென்று, அந்த சுற்று சுவரை இடித்தனர். இதை பார்த்த செஹரா அதை தடுக்க முயற்சித்தார். ஆனால் ஷெரீப் கேட்கவில்லை. மாறாக செஹராவை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இது குறித்து துங்காநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செஹரா அளித்த புகாரின் பேரில் ஷெரீப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்