கர்நாடகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 301 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-05 21:12 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 21 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 301 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 291 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மைசூருவில் 3 பேர், தட்சிண கன்னடாவில் 2 பேர், பல்லாரி, பெலகாவி, சித்ரதுர்கா, சிவமொக்கா, உடுப்பியில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர். 22 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 53 ஆயிரத்து 359 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. வைரஸ் தொற்றுக்கு பெங்களூரு நகரில் மட்டும் நேற்று ஒருவர் இறந்தார். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 66 பேர் இறந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 414 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதாரத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்