கர்நாடகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 33 ஆயிரத்து 391 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பெங்களூரு நகரில் 1,244 பேருக்கும், மைசூருவில் 34 பேருக்கும், தார்வாரில் 38 பேருக்கும், பெலகாவியில் 27 பேருக்கும், பல்லாரியில் 22 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 45 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 28 பேருக்கும், உடுப்பி, துமகூருவில் தலா 14 பேருக்கும், கோலாரில் 11 பேருக்கும், கலபுரகியில் 10 பேருக்கும், குடகில் 9 பேருக்கும், ஹாசனில் 8 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 7 பேருக்கும், சாம்ராஜ்நகர், பாகல்கோட்டையில் தலா 6 பேருக்கும், தாவணகெரேயில் 5 பேருக்கும், ஹாவேரி, உத்தரகன்னடாவில் தலா 4 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 1,107 பேர் குணம் அடைந்தனர்.
8 ஆயிரத்து 488 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.