சாம்ராஜ்நகரில் கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்வதாக நுகர்வோர் குற்றச்சாட்டு

சாம்ராஜ்நகரில் கூடுதல் மின் கட்டணம் வசூல் செய்வதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2022-09-24 18:45 GMT

கொள்ளேகால்:

சாம்ராஜ்நகர் மாவட்டம் (தாலுகா) சாமுண்டீஸ்வரி மின் வாரியத்திற்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் நூகர்வோர் ஒருவரிடம் அளவுக்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி அம்மாணபுரா கிராமம் கடல்வாடி கிராமத்தில் ஒருவருக்கு ஆகஸ்டு மாத மின் கட்டணமாக ரூ.43 ஆயிரம் செலுத்தவேண்டும் என்று ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்த மறுப்பு தெரிவித்ததும் மின் பகிர்வு மைய என்ஜினீரியர் ராகவேந்திரா, சம்பந்தப்பட்ட நபருக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த அந்த நபர் மின் பகிர்வு மையம் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அப்போது இதுவரை எனக்கு இவ்வளவு மின் கட்டணம் வந்தது இல்லை. ஆகஸ்டு மாதம் ரூ.43 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளனர். இதை செலுத்த தவறினால் மின் வினியோம் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது. எனவே மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்