மருத்துவ செலவுத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு; பெண்ணுக்கு ரூ.1.31 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

மருத்துவ செலவுத்தொகையை விண்ணப்பித்து இருந்த பெண்ணுக்கு ரூ.1.31 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-12 19:00 GMT

உப்பள்ளி;


தார்வார் டவுன் எம்.பி. நகரில் வசித்து வருபவர் பிரமதாநாத். இவரது மனைவி ஸ்ரீதேவி. இந்த தம்பதி எஸ்.ஐ.சி. நிறுவனத்தில் 10 ஆண்டுக்கான மருத்துவ காப்பீடு பெற்றனர்.

இதற்கிடையே ஸ்ரீதேவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக தார்வார் டவுனில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது ஸ்ரீதேவிக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான கட்டணமாக ரூ.29,216-ஐ செலுத்தினர்.

இந்த மருத்துவ செலவு தொகையை தனக்கு தருமாறு எல்.ஐ.சி.யில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் எல்.ஐ.சி. நிறுவனம், உரிய காரணம் இன்றி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவி, தார்வார் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த புகாரை ஏற்று விசாரணை நடத்திய கோர்ட்டு, மருத்துவ காப்பீடு பெற்றும் உரிய காரணமின்றி பெண்ணின் விண்ணப்பத்தை எல்.ஐ.சி. நிறுவனம் நிராகரித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 8 சதவீதம் வட்டியுடன் விண்ணப்பித்த மருத்துவ செலவு தொகை மற்றும் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது, வழக்கு தொடுத்ததற்கான செலவு சேர்த்து மொத்தம் ரூ.1.31 லட்சத்தை எல்.ஐ.சி. நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்