கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதிசெய்ய இன்று ஆலோசனை..!
கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதிசெய்ய இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
புதுடெல்லி,
கா்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதிசெய்ய காங்கிரஸ் மத்திய குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை)) நடக்கிறது. டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காங்.தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 224 தொகுதிகள் உள்ள கர்நாடகாவில் ஏற்கனவே 124 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எஞ்சிய 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது.