புதிய சாலை அமைத்து தரக்கோரி பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு விவசாயிகள் போராட்டம்

மூடிகெரே அருகே புதிய சாலை அமைத்து தரக்கோரி பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-20 18:45 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா அலுவள்ளி, அரலிமரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளது. பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள இந்த சாலைகளை சீரமைக்க கோரி அந்த பகுதி மக்கள் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனாலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் சேதமடைந்த சாலையால் அந்தப்பகுதி மக்கள் மிகவும் பரிதவித்து வந்தனர். இந்த நிலையில், அலுவள்ளி, அரலிமரம் உள்ளிட்ட 10 கிராமங்களில் புதிய சாலை அமைக்க வலியுறுத்தி ேநற்று மூடிகெரே தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எம்.பி.குமாரசாமி வீட்டின் முன்பு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், மூடிகெரே தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக சாலைகள் சேதமடைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின்னர், குமாரசாமி எம்.எல்.ஏ.வை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மேலும் செய்திகள்