சட்டசபை தேர்தலில் 140 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் டி.கே.சிவக்குமார் பேட்டி
வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் கூறினார்.
சிக்கமகளூரு-
வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் கூறினார்.
சிருங்கேரி சாரதம்மா கோவில்
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் சாரதம்மா கோவில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், அவரது மனைவி உஷா ஆகியோர் சாரதம்மா கோவிலுக்கு வந்தனர். அவருக்கு கோவில் நிர்வாம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து சாரதம்மனை டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் தரிசனம் செய்தனர். இரவு கோவிலில் நடந்த சண்டி யாகத்தை டி.கே.சிவக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் இரவு கோவிலில் தனது மனைவியுடன் டி.கே.சிவக்குமார் தங்கினார். இந்்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு சண்டி யாகத்தில் டி.கே.சிவக்குமார் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். சண்டியாகம் மதியம் 12 மணி வரை நடந்தது. அதுவரை டி.கே.சிவக்குமார் தனது மனைவியுடன் சண்டியாகத்தில் இருந்தார்.இதையடுத்து டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 140 இடங்களில் வெற்றி பெறும். கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியில் உழைத்தவர்கள் அனைவரையும் ஒதுக்கி வருகிறது.
பா.ஜனதாவை மக்கள் துரத்தி அடிக்கும்
எடுத்து காட்டாக எடியூரப்பா, லட்சுமணன் சவதி, ஜெகதீஷ் ஷெட்டர், ஆகியோரை பா.ஜனதா ஒதுக்கி வைத்து உள்ளது. கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் அணைக்கட்டு உடைந்து விட்டது. இனி ஒன்று சேர்ப்பது கஷ்டம். வெள்ளம் அடித்து செல்கிறது. பா.ஜனதா கட்சியின் ஊழலால் மக்கள் வெறுத்துள்ளனர். பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா ஆகியோர் மாநில முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளனர். நானும் மாநிலம் பிரசாரம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் இரவு நடந்த காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
பா.ஜனதா கட்சியை வருகிற 10-ந் தேதி மக்கள் துரத்தி அடிக்கும் நாளாகும். காங்கிரஸ் ஆட்சி அமைத்த முதல் நாள் உத்திரவாத கார்டுகளுக்கு கையெழுத்து போடுவதாகும். சிருங்கேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேகவுடாவை ஆதரிக்க வேண்டும் என கூறினார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி கொல்லூர் முகாம்பிகை கோவிலுக்குடி கே.சிவக்குமார் தனது மனைவியுடன் சென்றார்.