பத்ராவதி இரும்பாலையை காப்பாற்ற காங்கிரஸ் போராடும்

பத்ராவதி இரும்பாலையை காப்பாற்ற காங்கிரஸ் போராடும் என்று டி.கே.சிவக்குமார் உறுதி அளித்துள்ளார்.

Update: 2023-02-09 21:23 GMT

சிவமொக்கா:-

பத்ராவதி இரும்பாலை

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் சிவமொக்காவுக்கு வந்தார். பின்னர் பத்ராவதிக்கு சென்ற அவர், அங்குள்ள இரும்பாலை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் மத்தியில் அவர் பேசியதாவது:- பத்ராவதி இரும்பாலை மூட மாட்டோம் என்று தொழிலாளர்களுக்கு மாநில அரசு உறுதி அளித்தது. ஆனால் மாநில அரசு கூறியப்படி நடந்து கொள்ளவில்லை. சிவமொக்கா நாடாளுன்ற உறுப்பினரும்

இதுபற்றி நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். பத்ராவதி இரும்பாலையை காப்பாற்ற காங்கிரஸ் போராடும். அந்த தொழிற்சாலை மீண்டும் செயல்பட வைக்க உறுதிமொதி பூண்டுள்ளது.

உறுதிமொழி

பத்ராவதி இரும்பாலையை காப்பாற்றுவது எங்கள் பொறுப்பு. கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். உங்களுக்கு அளித்த உறுதிமொழியை நாங்கள் காப்பாற்றுவோம். இரும்பாலையை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூலம் எதிர்ப்பு தெரிவிப்போம். பத்ராவதி இரும்பாலையை மூடாமல் இருக்க காங்கிரஸ் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்