ராகுல்காந்தி யாத்திரை ஓர் ஆண்டு நிறைவு: மாவட்டந்தோறும் பேரணி நடத்த காங்கிரஸ் முடிவு
145 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்து கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த யாத்திரையை ராகுல் காந்தி நிறைவுசெய்தார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரையை (பாரத் ஜோடோ யாத்திரை) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தொடங்கினார்.
145 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்து கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த யாத்திரை ராகுல் காந்தி நிறைவுசெய்தார்.
இந்த யாத்திரையால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல்காந்தியின் செல்வாக்கு அதிகரித்ததாக அரசியல் வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி வருகிற 7-ந் தேதி நாடு முழுவதும் மாவட்ட அளவில் ஊர்வலங்களை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.