காங்கிரசில் இருந்து பஞ்சாப் எம்.பி. இடைநீக்கம்முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங்கின் மனைவி

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர், பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

Update: 2023-02-03 22:00 GMT

புதுடெல்லி, 

அமரிந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர். முன்னாள் மத்திய மந்திரியான இவர், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதியின் காங்கிரஸ் மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

இந்நிலையில், பிரனீத் கவுரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று அறிவித்துள்ளது. கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக அவரை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி பிரனீத் கவுருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் செயலாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான தாரிக் அன்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பா.ஜ.க.வுக்கு உதவும் கட்சிவிரோத நடவடிக்கைகளில் பிரனீத் கவுர் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவருக்கு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங் புகார் அனுப்பியுள்ளார். அதே கருத்தை மாநிலத்தின் வேறு பல மூத்த தலைவர்களும் தெரிவித்துள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்ட அந்த புகார், கவனமாக பரிசீலிக்கப்பட்டது. அதன் முடிவில், பிரனீத் கவுரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வது என்றும், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்