மெகுல் சோக்சி விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

மெகுல் சோக்சி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-04-16 19:45 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியுடன் தேடப்பட்டு வரும் மற்றொரு குற்றவாளியான மெகுல் சோக்சி, கரீபியன் தீவு நாடான ஆண்டிகுவா-பர்புடாவில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. ஆனால் அவரை ஆண்டிகுவா-பர்புடாவில் இருந்து வெளியேற்ற அந்த நாட்டு கோர்ட்டு தடை விதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் தளத்தில், 'நமது வங்கிகளில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் மோடி ஜியின் 'மெகுல் பாய்' பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து வருகிறார்.

அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் வெளியிட்ட ரெட் கார்னர் நோட்டீஸ் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது கோர்ட்டின் இந்த தீர்ப்பு வந்துள்ளது' என்று குறிப்பிட்டு இருந்தார். இவை அனைத்தும் மோடி அரசின் அலட்சியத்தால் நடந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ள ஜெய்ராம் ரமேஷ், இது வேண்டுமென்றே செய்யப்படுகிறது என்றும் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்